search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் சென்னை பசுமைச் வழி சாலை"

    காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு 2-வது நாளாக நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது. #Greenwayroad

    செங்கல்பட்டு:

    சென்னை-சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்கள் வழியாக இச்சாலை செல்கிறது. இதற்காக சுமார் 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. படப்பை கரசங்கால், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், வளையங்கரணை பகுதியில் 12.4 கிலோ மீடடர் தூரத்துக்கு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கல் நடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடை பெற்றது. செங்கல்பட்டு அருகே உள்ள ஆப்பூர், பாலூர், கொளத்தாஞ்சேரி பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் முத்துவடி வேலு, தாசில்தார் ரமா மற்றும் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து கல் நட்டினர். அப்பகுதியில் 19 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதையொட்டி அங்கு டி.எஸ்.பி. கந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள கிராமங்கள் வழியாக சுமார் 59 கிலோ மீட்டர் செல்வது குறிப்பிடத்தக்கது. #Greenwayroad

    காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது. #Greenwayroad

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை-சேலம் இடையே 8 வழி சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது.

    இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், கையகப்படுத்தப்படுகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 59.1 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படுகிறது. இதில் 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த கரசங்காலில் இருந்து தொடங்கி ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, ஆப்பூர், குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், மாவட்ட எல்லையான பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் செல்கிறது.

    8 வழி சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த அளவீடு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    நிலம் அளவிடும் போது விவசாயிகள் போராட்டம் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

    அவர்களை பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். விவசாயிகள், கிராமமக்கள் எதிர்ப்பையும் மீறி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நிலம் அளவீடு நடந்து முடிந்து விட்டது. நிலம் அளவீடு பணியில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் அளவீடு பணி இன்று தொடங்கியது. தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் ஆர்.டி.ஓ ராஜூ தலைமையில் அதிகாரிகள் நிலத்தை அளந்தனர். அளவிடப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி கற்களை நட்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது.

    சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 4-ந்தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முத்தரசன் தெரிவித்துள்ளார். #mutharasan #salemgreenroad

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாமக்கலில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வை சேர்ந்த 192 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

    சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்படும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வருகிற 4-ந்தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டு உள்ளோம். அனுமதி வழங்கவில்லை என்றாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மத்திய அரசால் போடப்பட்டு உள்ள வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது.

    காவிரி நதி நீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன்பே அ.தி.மு.க. சார்பில் வெற்றி விழா கூட்டம் நடத்தி வருகிறது. இதைவிட கேலிக்கூறியது வேறு ஒன்றும் இல்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பு என்பது பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வர விருப்பம் இல்லாமல், பிரச்சினையை நீடிக்க செய்ய வழிவகுக்கும் தீர்ப்பாக உள்ளது. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது. #mutharasan #salemgreenroad

    ×